இலவச தையல் மிஷின் பெற சிறுபான்மையின மகளிர் விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மகளிர் விலையில்லா மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

Update: 2022-01-11 11:15 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மகளிர் இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மகளிர் விலையில்லா மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழ்மை நிலையிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருவது போல் சிறுபான்மையினர் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மின்மோட்டார் உடன் கூடிய இலவச தையல் மிஷின் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தகுதியுடைய மகளிர் இலவச தையல் மெஷின் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தையல் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும் மற்றும் தையல் பயிற்சியை முடித்த அதற்கான சான்றையும் விண்ணப்பத்துடன் சேர்த்து இணைக்க வேண்டும்.

ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும் வயது வரம்பு 20 முதல் 45 க்குள் இருக்க வேண்டும் விதவை பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.ஒரு முறை இத்திட்டத்தில் தையல் மெஷின் பெற்றவர்கள் மீண்டும் ஏழு ஆண்டுகள் கழித்து தான் இந்த இலவச தையல் மிஷினை பெறுவதற்கு தகுதி உடையவர்களாக கருதப்படுவார்கள்.எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். 

Tags:    

Similar News