கொரோனா வார்டில் பாதுகாப்பு கவச உடை அணிந்து ஆறுதல் கூறிய அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று-உருமாறிய ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரகுபதிஆறுதல்

Update: 2022-01-12 09:45 GMT

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் தோற்று பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களை பாதுகாப்பு கவச உடை அணிந்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

 கொரோனா வார்டில் பாதுகாப்பு கவச உடை அணிந்து நோயாளிகளுக்கு  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆறுதல் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் வைரஸ் தொற்றின் தாக்கத்தில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதால் ஏற்கனவே சென்ற வருடம் வைரஸ் தொற்று பாதித்து சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ வசதிகளை மீண்டும் செய்திட வேண்டும்.

என அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளை தயார்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தினர். ஏற்கெனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதித்து சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்திலும் வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்,திடீரென புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்வதற்காக சென்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,  கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று  வரும் நோயாளிகளை சந்தித்தும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இருக்கிறதா என்பது குறித்தும் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களிடம்  ஆலோசனை நடத்தினார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தற்போது கொரோனா தொற்று மற்றும் உருமாறிய ஒமைக்ரான் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய சட்டத்துறை அமைச்சரின் செயலுக்கு நோயாளிகள் மற்றும் மருத்துவர்களிடையே  வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.



Tags:    

Similar News