புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் மருத்துவ முகாம்

புதுக்கோட்டை நகர திமுக செயலாளர் க. நைனா முகமது ஏற்பாட்டின் பேரில், நடைபெற்ற இந்த ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடந்தது

Update: 2021-12-27 09:45 GMT

புதுக்கோட்டை நகர மன்ற வளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகர மன்ற அலுவலகத்தில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாபெரும் ஆரம்ப நிலை புற்று நோய் கண்டறிதல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும்  கலந்து கொண்டு பல்வேறு சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றனர்.

புதுக்கோட்டை நகர  திமுக செயலாளர் க. நைனா முகமது ஏற்பாட்டின் பேரில், நடைபெற்ற இந்த ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறிதல் மருத்துவ முகாமில்,  திமுக நிர்வாகிகள் வேலுசாமி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அறிவுடைநம்பி மற்றும் ஆட்டோ தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News