ஜல்லிக்கட்டு: ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் அதிக அளவில் நடத்தப்படுவது வழக்கம்

Update: 2022-01-11 11:15 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆலோசனை நடத்தினார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் அதிகப்படியாக நடத்தப்படுவது வழக்கமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கத்தால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டும் தற்போது கொரோனாவின் மூன்றாவது அலையான ஒமிக்ரான் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.இதனை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக கால்நடை மருத்துவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் சம்பத் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News