புதிய அரசு பள்ளி கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு: ஆட்சியரிடம் திமுக எம்பி புகார்

அரசிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது

Update: 2021-09-06 11:33 GMT

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலை தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது இதை திமுக எம்பி எம் எம் அப்துல்லா பார்வையிட்டு ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக்கட்டிடங்களில் தரம் குறித்து ஆய்வு நடத்த, ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்  மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம். முகமதுஅப்துல்லா.

புதுக்கோட்டை, சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில், மாநிலங்களவை திமுக  உறுப்பினரான  புதுக்கோட்டை எம். முகமதுஅப்துல்லா இன்று  நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்து  ஒப்படைக்கப்பட தயாராக உள்ளது.  ஆனால்,  அந்த புதிய  கட்டிடத்தில் தற்போது விரிசல்  ஏற்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. கரும்பலகையின் நடுவில் துளை  ஏற்பட்டுள்ளது.  இதன்மூலம், அந்தப் பள்ளியின் கூடுதல் வகுப்பறை தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, திமுக எம்பி முகமதுஅப்துல்லா,  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை  நேரில் சந்தித்து, சுமார்  அரை மணி நேரம்   பேசினார். இதன்பிறகு, செய்தியாளர்களிடம் திமுக எம்பி முகமதுஅப்துல்லா மேலும் கூறியதாவது: சந்தப்பேட்டை நடுநிலைப்பள்ளிகள் கூடுதல் வகுப்பறை கட்டடம், இன்னும் அரசிடம் ஒப்படைக்கப் படாமல் உள்ளது. இந்நிலையில், தற்போது அந்த கட்டிடத்தில் பல்வேறு பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு, காரை பெயர்ந்து ள்ளது. பள்ளிக் கட்டிடம் தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது குறித்து ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது, மேலும், மாவட்டம் முழுவதும் அதிமுக ஆட்சியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டுமெனவும்  முறையிடப்பட்டுள்ளது. ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார்  என்றார் அவர்.


Tags:    

Similar News