புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் விற்பனைக்காக குவிந்த ஆடுகள்

இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை ஆகாமல் மீண்டும் திரும்பிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது

Update: 2021-10-15 06:15 GMT

புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் விற்பனைக்காக குவிந்த ஆடுகள்

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வாரம் வரும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தைகள் நடைபெற்று வருவது வழக்கம் அதேபோல் இன்றும் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் காலையிலேயே ஆடுகள் விற்பனை துவங்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் மணப்பாறை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை விற்பனை செய்ய ஆடுகள் வளர்க்கும் விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்ய  வாகனம் மூலம், புதுக்கோட்டை சந்தைக்கு ஆடுகளைக் கொண்டுவந்து விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.ஆனால், புரட்டாசி மாதம் இன்னும் முடியவில்லை புரட்டாசி மாதம் இந்த வாரத்துடன் முடிவு பெறும் நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டாததால், விற்பனை செய்வதற்காக  ஆடுகளை கொண்டு வந்த விவசாயிகள்  ஏமாற்றமடைந்தனர்.

ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தோம் புரட்டாசி மாதம் முடியும் தருவாயில் தற்போது கூட ஆடுகளின் விற்பனை மந்தமாக இருந்ததால், இன்று நடைபெற்ற புதுக்கோட்டை  ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை ஆகாமல் மீண்டும் ஆடுகளை வாகனத்தில் திரும்பிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News