புதுக்கோட்டையில் இன்று மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு

புதுக்கோட்டை நகரில் இன்று மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் கடைவீதி வெறிச்சோடியது.

Update: 2022-01-23 05:24 GMT

புதுக்கோட்டையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டிருந்த மாவட்ட விளையாட்டு மைதானம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிக அளவில் பரவி வருகிறது.மேலும் தமிழகம் முழுவதும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்றும் வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக கடந்த ஆண்டு மிகுந்த குறைந்த அளவில் வைரஸ் பரவி வந்த நிலையில் தற்போது இருபதாயிரம் முப்பதாயிரம் என எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடாத வகையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என அறிவித்தது.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் இன்று மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் கடைபிடித்து வருகின்றனர்.

குறிப்பாக மாவட்ட விளையாட்டு மைதானம், உழவர் சந்தை, மீன் மார்க்கெட் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட கடைகளும் அடைக்கப் பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களான ஆவின் பால், மெடிக்கல் மேலும் உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவையில்லாமல் வெளியே சுற்றி வரும் சூழ்நிலையில் இருந்து வந்த நிலையில் இன்று மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகளில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காட்சி அளித்தது.

இதனால் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் முறையாக ஒரு ஊரடங்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

Similar News