முழு ஊரடங்கு நாளிலும் சாலைகளில் தீவிரமாக ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள்

முழு ஊரடங்கு நாளிலும் துப்புரவு பணியாளர்கள் சாலைகளில் தீவிரமாக துப்புரவு பணிகளில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-16 10:13 GMT

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் ஊரடங்கு காரணமாக அதிக அளவில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர் நகராட்சி பணியாளர்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு ஊரடங்யை மீண்டும் பிறப்பித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக அனைத்து சாலைகளும் வெறிச்சோடி ஆட்கள் நடமாட்டமின்றி காணப்பட்டாலும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் எப்பொழுதும் போல் தங்கள் பணிகளை செய்து வந்தனர்.

குறிப்பாக முழு ஊரடங்கு காரணமாக பல்வேறு இடங்களில் அதிக அளவில் தேங்கிக்கிடந்த குப்பைகளையும் மற்றும் சாக்கடைகளில் தூர்வாரும் பணியில் தீவிரமாக நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

மேலும் ஊரடங்கு காரணமாக அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டு வீடுகளில் இருக்கும் சூழ்நிலையில் நாங்கள் வீடுகளில் ஓய்வெடுக்காமல் எங்களுடைய துப்புரவு பணியை முழுமையாகச் செய்து வருகின்றோம்.

ஆனாலும் எங்களுக்கு போதிய ஊதியம் கிடைப்பதில்லை அதேபோல் தெருக்களில் குப்பைகள் வாங்கச் செல்லும் போது பொதுமக்கள் ஒரு சிலர் குடிப்பதற்கு கூட தண்ணீர் வழங்குவதில்லை என தெரிவித்தனர்.

Tags:    

Similar News