புதுக்கோட்டை நகராட்சியில் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: எம்எல்ஏ ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சியில் வரத்து வாய்க்கால்களை தூர்வாரும் பணியை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருதூர்முத்துராஜா ஆய்வு.

Update: 2021-09-24 07:18 GMT

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தூய்மை புதுகை என்ற திட்டத்தின் மூலம் 20ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு புதுக்கோட்டையில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வரத்து வரிகள் மற்றும் சாக்கடைகள் தூர்வாரும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து புதுக்கோட்டை சந்தப்பேட்டை, மேல ராஜவீதி, கீழராஜவீதி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தாலே மழை நீர் வரத்து வரிகள் மற்றும் சாக்கடைகளில் தேங்கி சாலைகளில் வெள்ளம் போல் மழைநீர் செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டே தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் புதுக்கோட்டை நகராட்சியில் தூய்மை புதுகை என்ற திட்டம் கடந்த வாரம் துவங்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு புதுக்கோட்டை நகர பகுதியில் அனைத்து வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு முறையாக தூர்வாரும் பணிகள் நடைபெற வேண்டும்.

அனைத்து இடங்களிலும் தூர்வாரி மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காத வாரும் பணியை முறையாக செய்ய வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு எம்எல்ஏ முத்துராஜா அறிவுரைகளைக் கூறி தூர்வாரும் பணி நடைபெற்று வரும் இடங்களை பார்வயிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் நகராட்சி ஆணையர் நாகராஜ் தோழர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News