தேவைப்பட்டால் மார்க்கெட், சந்தைகள் மூடப்படும்: புதுக்காேட்டை ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவைப்பட்டால் மார்க்கெட் மற்றும் சந்தைகள் மூடப்படும். ஆட்சியர் கவிதா ராமு பேட்டி

Update: 2021-08-12 08:24 GMT

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு பெண்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சந்தை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அதிகமாக உள்ளதாக தகவல் வந்துள்ளது ஆய்வு செய்த பின்னர் தேவைப்பட்டால் மார்க்கெட் மற்றும் சந்தைகள் மூடப்படும். ஆட்சியர் கவிதா ராமு பேட்டி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பாக உலக தாய்ப்பால் வார விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் விழா இன்று நடைபெற்றது. 

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் பணியாற்றும் பெண்களின் கோலாட்டம் கும்மி ஆட்டம் ஆகியவை நடைபெற்றது. உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அதை வாசகர்களுக்கு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர் உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஆட்சியர், இம்மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் உள்ளனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

மார்க்கெட் மற்றும் சந்தை பகுதிகளில் அதிக அளவு கூட்டம் கூடுவதாக தகவல் வந்துள்ளது. உரிய ஆய்வுக்கு பின்னர் தேவைப்பட்டால் மார்க்கெட் மற்றும் சந்தை மூடப்படும் என்றார்.

Tags:    

Similar News