முழு முடக்கம்: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய புதுக்கோட்டை பேருந்து நிலையம்

முழு முடக்கம் காரணமாக புதுக்கோட்டை நகரம் மக்கள்- வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடிக்காணப்பட்டது. போலீஸார் தீவிர கண்காணிப்பு

Update: 2022-01-09 04:30 GMT

முழுமுடக்கம் காரணமாக  வெறிச்சேடிக்காணப்பட்ட புதுக்கோட்டை பேருந்து நிலையம்

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கையும் மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதலே  பொதுப்போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படாததாலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருப்பதாலும், அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி  வெறிச்சோடி காணப்பட்டது.  புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 550 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு 42 இடங்களில் வாகன தணிக்கையும் செய்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 10 செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது

இதேப்போல் 22 இருசக்கர வாகனங்கள் மற்று 8 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணியில் போலீஸார்  ஈடுபட்டு வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரக்கூடிய ஒரு சில பேருந்துகள் மட்டும் புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கி விட்டுச் செல்கின்றனர்.

Tags:    

Similar News