பேருந்துகளில் செல்பவர்கள் ஓட்டுனரை நம்பியே பயணிக்கின்றனர்:காவல் ஆய்வாளர் பேச்சு

மதுபோதையில் இருசக்கர வாகனங்கள் ஓட்டி வரும் வாகனம் ஓட்டுபவர்களால் அதிக விபத்துகள் அதிகரித்து வருகிறது

Update: 2021-11-25 10:30 GMT

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள பணிமனை அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் நகர காவல் ஆய்வாளர் குருநாதன் கலந்து கொண்டு பேசினார்

பேருந்துகளில் செல்லும் பயணிகள் ஓட்டுனரை நம்பிதான் பேருந்தில் நிம்மதியாக உறங்குகின்றனர் என்றார் நகர காவல் ஆய்வாளர் குருநாதன்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள போக்குவரத்து பணிமனையில் இன்று நடைபெற்ற விபத்து தடுப்பு மற்றும் பயணிகளிடம் கனிவான பேச்சு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுக்கோட்டை நகர் மற்றும் புறநகர் கிளை சார்பில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பொது மேலாளர் இளங்கோ தலைமை வகித்தார் உதவி மேலாளர் தொழில்நுட்ப ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி மோகன்ராஜ், பிரம்ம குமாரிகள் சங்க தலைவர் ராஜலட்சுமி, மற்றும் செபஸ்டியன், பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நகர காவல் ஆய்வாளர் குருநாதன் நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் பேசியதாவது: பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் ஓட்டுனரை நம்பிதான் பேருந்துகளில் நிம்மதியாக தூங்குகின்றனர். பத்திரமாக அவர்கள் செல்லும் இடத்திற்கு கொண்டு போய் சேர்த்து விடுவார் என்ற நம்பிக்கையில் பேருந்துகளில் பொதுமக்கள் உறங்குகின்றனர். அதேபோல், ஓட்டுநர்கள் மிக கவனமாக பேருந்துகளை இயக்க வேண்டும் இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு சாலை விதிமுறைகள் பற்றி தெரியாத நிலை தற்போது இருந்து வருகிறது.

எனவே, பேருந்து ஓட்டுனர்கள் தான் மிக கவனமாக பேருந்துகளை ஓட்ட வேண்டும் ஏதாவது விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக பேருந்து ஓட்டுனர் தான் காரணம் என பொதுமக்கள் சாதாரணமாக ஆத்திரம் அடைவது இயல்பான ஒன்று. அதனால் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளை ஓட்டும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்கும் பொழுது கவனமாக இயக்க வேண்டும்.

பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களிடம் கனிவாகப் பேசவேண்டும் தற்போது இருக்கும் காலம் விஞ்ஞான வளர்ச்சி பெற்றுள்ளது. அனைவரிடத்திலும் செல்போன்கள் கையில் உள்ளது. ஒரு காலகட்டத்தில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் ஒரு புகைப்படக்காரரரை அழைத்து புகைப்படம் எடுக்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போது செல்போன் மூலம் வாட்ஸ்அப் பேஸ்புக் என்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பேருந்துகளில் நடக்கும் சில சில பிரச்னைகள் வேகமாக பரவி விடுகிறது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுது மதுபோதையில் இருசக்கர வாகனங்கள் ஓட்டி வரும் வாகனம் ஓட்டுபவர்களால் அதிக விபத்துகள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை பரிசோதனை செய்ய முடியாத ஒரு சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே, மதுபோதையில் விபத்துகளும் தற்போது அதிகரித்து வருகிறது.   எனவே பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களிடம் கனிவான பேச்சுகள் மூலம் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும்  என்றார்.இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர்கள்


மற்றும் நடத்துனர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News