கோலாகலமாக ஆயுத பூஜையைக் கொண்டாடிய குத்துச்சண்டை வீரர்கள்

குத்துச்சண்டையில் பல்வேறு வெற்றிகளைப் பெற்று ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும் என வீராங்கனைகள் உறுதிமொழி.

Update: 2021-10-14 06:03 GMT

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குத்துச்சண்டை வீரர்கள் தங்கள் பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்து ஆயுத பூஜை விழாவை கொண்டாடினர். 

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு தொழில் கூடங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பொருள்களை சாமி முன்பு வைத்து பொரி, பழங்கள் உள்ளிட்டவைகளை வைத்து ஆயுத பூஜை கொண்டாடுவது வழக்கம். அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குத்துச்சண்டை பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் தங்கள் பயன்படுத்தும் கிளவுஸ், ஸ்கிப்பிங் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஒன்றாக வைத்து விளக்கேற்றி கோலாகலமாக ஆயுத பூஜை பண்டிகையை கொண்டாடினர்.

இதில் குத்துச்சண்டை பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் ஆயுதபூஜை நிகழ்வில் சாமி கும்பிட்ட பிறகு குத்துச்சண்டையில் பல்வேறு வெற்றிகளைப் பெற்று, நாட்டுக்காக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும் என விளையாட்டு வீராங்கனைகள் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். 


Tags:    

Similar News