புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயற்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-27 07:38 GMT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் மண்ணின் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த அழகம்மாளை அழைத்துச்செல்லும் காவல்துறையினர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் இருந்து வருகிறது.  

தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள் காவல் துறையினர் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு பொதுமக்கள் கொண்டுவரும் புகார் மனுக்களை ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் போட்டு செல்லுமாறும் காவல்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட தேங்காய் திண்ணிபட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகம்மாள் என்ற பெண் கடந்த 20 ஆண்டுகளாக புறம்போக்கு இடத்தில் வசித்து வருவதாகவும் அந்த இடத்திற்கு பட்டா வழங்க பல்வேறு அரசு அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அருகிலிருந்த காவல்துறையினர் உடனடியாக வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணிடம் இருந்து மண்ணெண்ணெய் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News