புதுக்கோட்டையில் உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்று

உலக சாதனை அபாகஸ் நிகழ்ச்சியில்( 2021) மாணவ, மாணவிகள் தொடர்ந்து 35 மணி நேரம் கலந்துகொண்டு உலக சாதனை படைத்தனர்

Update: 2021-10-04 10:40 GMT

புதுக்கோட்டை ஆத்மா அகாடமியில் அபாகஸ் உலக சாதனை நிகழ்வில் கலந்துகண்ட மாணவ  மாணவிகளுக்கு சான்றிதழ்கள்  வழங்கப்பட்டது

புதுக்கோட்டை ஆத்மா அகாடமியில் அபாகஸ் உலக சாதனை நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழலும், பதக்கமும் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.

பிரைனி பாப்ஸ் அபாக்கஸ் நடத்திய கலாம் புக் ஆப் ரெக்கார்டு என்ற உலக சாதனை அபாகஸ் நிகழ்ச்சியில் 2021 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தொடர்ந்து 35 மணி நேரம் நடந்த இந்த உலக சாதனை நிகழ்வில் புதுக்கோட்டை ஆத்மா அகாடமி மற்றும் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 57 பேர் கலந்துகொண்டார்கள்.

அவர்களுக்கான உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றும், பாரட்டு விழாவும் கீழராஜவீதியில் உள்ள ஆத்மா யோகா மையத்தில் நடைபெற்றது. விழாவில் ஆத்மா அகாடமியின் செயலாளர் யோகா புவனேஸ்வரி பாண்டியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தேசிய நல்லாசிரியர் விருதாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி கலந்துகொண்டு சான்றுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மரம் நண்பர்கள் அமைப்பின் பொறுப்பாளர் பழனியப்பா மெஸ் கண்ணன் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.ஆத்மா அறக்கட்டளை நிறுவனர் யோகா பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.

கெளரவ விருந்தினர்களாக பிரைனி பாப்ஸ் நிர்வாக தலைவர் ஜெயபிரியா, சிஇஓ ஜோதிபாசு ஆகியோர் பேசும்போது மாணவர்களுக்கு நினைவாற்றல், கற்பனைத்திறன் வளர்ப்பு, தனித்திறமைகள் வளர்ப்பதில் ஆர்வம், எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்குவது, தன்னம்பிக்கை வளர்த்தல், குழு ஒற்றுமை ஆகிய நற்பண்புகள் வளர்பதற்கு அபாக்கஸின் பயன்கள் குறித்து பேசியதுடன் மாணவர்களுக்கு சான்றிதழும், ஆத்மா அகாடமிக்கு சிறப்பு சான்றும் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாணவர்களும் பெற்றோர்களும் செய்தனர். நிறைவாக பெற்றோர்கள் சார்பாக பிரேம ரஞ்சனி நன்றி கூறினார்.


Tags:    

Similar News