அமுதசுரபி இலவச உணவு திட்டத்தை துவக்கி வைத்த சமூக ஆர்வலர்

தனது திருமண நாளில் அமுதசுரபி என்ற இலவச உணவு திட்டத்தை சமூக ஆர்வலர் நைனா முகமது துவக்கி வைத்தார்.

Update: 2021-12-03 06:30 GMT

அமுதசுரபி இலவச உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த நைனா முகமது.

புதுக்கோட்டை திமுக நகரக் கழகச் செயலாளராகவும், ரோட்டரி சங்க நிர்வாகியுமான நைனா முகமது பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய் துவருகிறார். அதன் ஒரு பகுதியாக சமத்துவ அறக்கட்டளை ஒன்றை துவக்கி கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உணவு இல்லாமல் தவித்த முதியவர்கள் என தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கினார்.

அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று அவருடைய 27வது திருமண நாளை முன்னிட்டு அவருடைய அலுவலகம் முன்பு குளிர்சாதன பெட்டியில் காலை இட்லி,  மதியம் உணவு என மூன்று வேளையும் குளிரூட்டப்பட்ட குளிர்சாதன பெட்டியின் இலவசமாக உணவுகள் வைக்கப்படுகிறது.

பசியால் வாடும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் யார் வேண்டுமானாலும் அந்த உணவை இலவசமாக எடுத்துச் செல்லலாம். அதேபோல் இன்று துவங்கப்பட்ட இந்த அமுதசுரபி என்ற திட்டம் பசியால் வாடுகின்ற வயிற்றுக்கு ஒரு பிடி உணவு என்ற இலவச உணவு வழங்கும் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முதலாக துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள், திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News