நடிகர் விஜய் பிறந்தநாள் : புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கி கொண்டாட்டம்

நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கொண்டாடினார்கள்.

Update: 2021-06-22 05:23 GMT

புதுக்கோட்டையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு காலை உணவு வழங்கும் விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகள்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பர்வேஸ் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில்  கேக் வெட்டி கொண்டாடினர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காலை உணவு மகிழ்ச்சியோடு  வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News