புதுக்கோட்டை: முழு ஊரடங்கையொட்டி பாதுகாப்பு பணியில் 550 போலீசார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி பாதுகாப்பு பணியில் 550 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-01-16 04:35 GMT

முழு ஊரடங்கு முன்னிட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் சாலைகள் வெறிச்சோடி காட்சியளிக்கிறது/

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று தற்பொழுது தமிழகம் முழுவதும் அதிக அளவில் பரவி வருகிறது.

இதனை கட்டுப் படுத்தும் விதத்தில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் ஏற்படுத்தி வருகிறது.

அதே போல் பல்வேறு ஊரடங்கு பிறப்பித்தது உள்ளது. அதேபோல் நோய் தொற்றை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 550 காவல்துறையினர் மற்றும் 100 ஊர்காவல் படையினர்10 செக்போஸ்ட் 4 சுங்கச்சாவடி 42 இருசக்கர வாகனம் 8 ஜீப் 22 வாகன சோதனை மையங்கள் என புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதியப்பட்டு அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை முழு வருடங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

Similar News