உக்ரைனில் தவிக்கும் 5 புதுக்கோட்டை மாணவர்கள்- அமைச்சர் ரகுபதி தகவல்

உக்ரைன் நாட்டில் தவிக்கும் 5 புதுக்கோட்டை மாணவர்கைள நடவடிககை எடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் ரகுபதி கூறினார்.

Update: 2022-02-27 05:11 GMT

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, ஆட்சியர் கவிதா ராமு, எம்.எல்.ஏ. முத்துராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

மாவட்டத்தில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 420 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மாவட்டத்தில் 1356 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது 5312 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பல மாணவர்கள் உக்ரைன் நாட்டிற்கு மருத்துவம் படிப்பதற்காக சென்றுள்ளனர்

இதில் ஐந்து மாணவர்கள் தற்போது மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு தங்களை காப்பாற்றுமாறு ரிஜிஸ்டர் செய்துள்ளனர்

இது குறித்து தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி 5 மாணவர்களையும் இந்தியாவிற்கு அழைத்து வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

Similar News