புதுக்கோட்டையில் கூரியர் தபாலில் கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைது

பார்சலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மதுரை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

Update: 2021-10-26 12:00 GMT

கொரியரில் கஞ்சா கடத்திய மூன்று பேர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா மேல நிலை பற்றிய சேர்ந்தவர்கள் மணிகண்டன் விஜி முருகேசன் இவர்கள் 3 பேர் பெயரிலும் பெங்களூரிலிருந்து கோட்டைக்கு கொரியர் மூலம் ஒரு பார்சல் வந்துள்ளது. இந்த பார்சலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மதுரை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில்,  மதுரை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், புதுக்கோட்டைக்கு வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர் அப்போது அந்த கூரியர் பார்சலை வாங்க வந்த மணிகண்டன் மற்றும் விஜி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்ததில், கோவையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் இந்த பார்சல் பெற்று வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கூறியதாக தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் முருகேசனை கைது செய்தனர்

மூவரையும் கைது செய்து அவருக்கு வந்த கொரியர் பார்சலை வாங்கி பிரித்து பார்த்தபோது, 620 கிராம் கஞ்சாவில் இருந்து போதை ஆயில் தயாரிக்கப்பட்டு சிறுசிறு பாட்டிலில் அடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்ட மூவரையும் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அவர்களை வரும் 9ஆம் தேதி வரை திருமயம் கிளை சிறையில் அடைக்க நீதிபதி அறிவழகன் உத்தரவிட்டார்.

Similar News