பெண்களை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள்: புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு

பெண்களை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2022-03-05 15:30 GMT

பெண்களை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள்.

புதுக்கோட்டை மாவட்டம் கரூர் குமுலூர் பகுதியை சேர்ந்தவர் கனகம்மாள். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6.1.2018ம் ஆண்டு நடந்த தகராறில் காளிமுத்து கனகம்மாளை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அவரது வீட்டிலேயே வைத்து அவரது உடலை எரித்தார். இந்த வழக்கு தொடர்பாக கரூர் போலீசார் காளிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது காளிமுத்து ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் கரூருக்கு அடுத்த பகுதியான ஆவுடையார்கோவில் பகுதியில் கடந்த 4&9&2019ம் தேதி அன்று பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் காளிமுத்து மற்றும் அவர் நண்பர்களான சிவக்குமார், லெனன் பாய் ஆகிய மூவரும் சேர்ந்து பஞ்சவர்ணம் என்ற பெண்ணை கொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்து உட்பட 3 பேரை கைது செய்தனர். இந்த 2 வழக்குகளும் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதி சத்யா 2 வழக்குகளில் தொடர்புடைய முதல் குற்றவாளியான காளிமுத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றும் 20 வருடங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்

2வது குற்றவாளியான சிவகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை, 10 கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1.25 லட்சம் அபராதமும், 3வது குற்றவாளியான மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த லெனன்பாய்க்கு ஒரு ஆயுள் தண்டனையும் மற்றும் 10 வருடங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.


Tags:    

Similar News