அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

Update: 2021-03-17 07:45 GMT

புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திக் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் இன்று புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை வழங்கினார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை நகர கழக அதிமுக செயலாளர் பாஸ்கர், முன்னாள் நகர்மன்றத் துணை தலைவர் சேட்டு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News