கிராம நிர்வாக உதவியாளர் தூக்குப் போட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில், இலவச வேஷ்டி சேலையை திருட முயற்சி நடந்த சம்பவத்தில், தன் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயுமோ என்ற அச்சத்தில் கிராம நிர்வாக உதவியாளர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-14 18:04 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இலவச வேஷ்டி சேலையை லோடு ஆட்டோ மூலம் திருட முயற்சி நடந்தது. இதனை பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் திருட்டு சம்பவம் முறியடிக்கப்பட்டது.

இதுகுறித்து லோடு ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு கிராம நிர்வாக அலுவலகத்தில் பணி புரியும் நிர்வாக உதவியாளர் ராமன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டது. இதனால் ராமன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயுமோ என்ற அச்சத்தில் ஆலங்குடியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் கிராம நிர்வாக உதவியாளர் ராமன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் கிராம நிர்வாக உதவியாளர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News