ஆலய திருப்பணிக்கு மொய் விருந்து பணத்தை தனமாக வழங்கியவர்

ஆலங்குடி அருகே நேற்று சுமார் 30 நபர்கள் சேர்ந்து மொய் விருந்து விழா நடத்தினர். .இவ்விழாவில் 30 நபருக்கும் பல லட்சங்கள் விழாவில் மொய் பணம் வந்தது .இந்நிலையில் மொய் விருந்தில் வந்த பணத்தை ஒருவர் நெடுவாசலில் உள்ள சிவன் கோவில் கட்டுவதற்கு தானமாக வழங்கினார்.

Update: 2021-02-09 04:14 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் நேற்று 30 பேர்கொண்ட மொய் விருந்து விழா நடைபெற்றது .இப்பகுதியில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மொய்விழா நடத்தப்படுவது வழக்கமாக இ ருந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று தாக்கத்தினால் இவ் வாண்டு தை மாதம் மொய் விருந்து விழா நடைபெற்றது

நெடுவாசல் கிராமத்தில் உள்ள பாலவேலாயுதம் என்பவர் சுமார் 18 ஆண்டு காலமாக அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி, 1 மகன்,மற்றும்1 மகள் உள்ளனர். பாலவேலாயுதம் சார்பில் தாய் விக்டோரியா மற்றும் அவரது மகன் ரெங்கேஸ்வரன் நேற்று மொய் விழாவில் கலந்துகொண்டு கூறுகையில் நேற்று அவருக்கு வரப்பட்ட மொய் விழாவில் 31, 64 ,171 முழு தொகையையும் இவர்கள் வணங்கும் சிவன் ப க்தர்கள் என்ற சார்பில் சிவன் கோவில் கட்டுவ தற்கு முழு தொகையையும் கோவில் நிர்வாகி டிரஸ்ட் அவர்களிடம் தானமாக ரெங்கேஸ்வரன் வழங்கினர்.

இதுகுறித்து பால வேலாயுதம் மகன் ரெங்கேஸ் வரன் கூறும்போது,எனது தந்தை நீண்டகாலமாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். என் தந்தை தீவிர சிவன் பக்தர் ஆவார். எங்கள் ஊரான நெடுவாசலில் சிவன் கோயிலி ல் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கு என் தந்தையின் விருப்பப்படி இன்று எங்களுக்கு வரப்பட்ட மொய் பணம் 31 லட்சத்து 64 ஆயிரத்து 171 மொத்த பணத்தையும் எங்கள் குடும்பத் தின் சார்பில் நெடுவாசல் சிவன் கோயில் கட்டுவதற்க்கு கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினோம். என் தந்தையின் விருப்பப்படி சிவன் கோவில் கட்டுமானத்திற்கு நிதி அளித்தது எங்கள் குடும்பத்தினருக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.

மேலும் நாங்கள் அனைவரும் சிவ பக்தர்கள், எங்கள் பாட்டியும், அப்பாவும், கைலாயம் வரை சென்றவர்கள் என்றும், எங்கள் ஊரில் சிவலாயம் கட்டிடம் கட்ட திருப்பணிகள் தொடர்ந்து மூன்று ஆண்டு ஆகிறது. இதற்கு முன்பு கோவில் திருப்பணிக்கு 16 லட்சம் வழங்கினோம், நெடுவாவல் பத்ரா காளி யம்மன் கோவிலுக்கு ஒரு ஏக்கர் தானமாக வழங்கி உள்ளோம் என்று கூ றினார்.

Similar News