நாமக்கல்லில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி

நாமக்கல்லில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-03-04 07:24 GMT

நாமக்கல்லில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அடுத்த கணக்கன் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் சின்னத்தம்பி. இவர் தனது மண் வீட்டை சீரமைப்பு செய்வதற்காக வீட்டின் சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். சுவர் இடிப்பதை, பக்கத்து வீட்டில் வசித்து வரும் பூங்கொடியும்(55), அவரது 2 வயது பேத்தி தேவஸ்ரீயும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சின்னதம்பி தனது சுவரை இடித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மண்சுவர் சின்னத்தம்பி மீதும், பூங்கொடி மற்றும் தேவஸ்ரீ மீதும் விழுந்தது. இதில் பூங்கொடி மற்றும் தேவஸ்ரீ ஆகியோர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் படுகாயமடைந்த சின்னத்தம்பியை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News