நேர்மையான நிர்வாகம் அமைய பாஜகவுக்கு வாக்களியுங்கள்: நகர தலைவர் சரவணன்

நாமக்கல் நகராட்சியில் ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் அமைந்திட பாஜ வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று நகர பாஜக தலைவர் சரவணன் கேட்டுக்கொண்டார்.

Update: 2022-02-13 05:45 GMT

நாமக்கல் நகராட்சி 39வது வார்டில் பாஜக தேர்தல் அலுவலகத்தை நகர தலைவர் சரவணன் திறந்து வைத்து, தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். அருகில் வேட்பாளர் சின்னுசாமி.

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியில் உள்ள நகராட்சி 39வது வார்டு பகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக சின்னுசாமி போட்டியிடுகிறார். இதையொட்டி கொண்டிசெட்டிப்பட்டி பகுதியில் பாஜ தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் நகர தலைவர் சவரணன் கலந்துகொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் பிரச்சாரத்தை துவக்கி வைத்து அவர், நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் 2 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 37வார்டுகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜ வேட்பாளர்கள் 23 வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.

பாரதப்பிரதமர் மோடியின் திட்டங்களால் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இதனால் பொதுமக்களிடத்திலும், இளைஞர்களிடத்திலும் பாஜாகவின் செல்வாக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. நாமக்கல் நகராட்சித் தேர்தலில் 10க்கும் மேற்பட்ட பாஜக கவுன்சிலர்கள் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது. நகராட்சியில் ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் அமைந்திட பொதுமக்கள் பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று சரவணன் கூறினார்.

நிகழ்ச்சியில், வேட்பாளர் சின்னு சாமி, மாநில எஸ்சி அணி செயற்குழு உறுப்பினர் குப்புசாமி, நகர துணை தலைவர் சிலம்பரசன், நகர மகளிர் அணி தலைவி சாந்தி, அரசு பிரிவு தலைவர் செல்வராஜ், காவேட்டிப்பட்டி தேர்தல் பொறுப்பாளர் தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News