சேலம் மண்டல தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களுக்கு நாமக்கல்லில் பயிற்சி

சேலம் மண்டல அளவில், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் நடைபெற்றது.

Update: 2022-08-26 02:15 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களுக்கான பயிற்சி முகாமில், நகராட்சி சேர்மன் கலாநிதி பேசினார். 

சேலம் மண்டல நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், மண்டல அளவிலான தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பை சேலம் மண்டல நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசும்போது, தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள் நாள்தோறும், 30 வீட்டு உரிமையாளர்களை சந்தித்து குப்பைகளை பிரித்து கொடுப்பதன் அவசியம் குறித்து விளக்க வேண்டும்.

நீர்நிலைகளின் அருகில் குப்பைகளை கொட்டுவது மற்றும் தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளை எடுத்து கூற வேண்டும் என தெரிவித்தார். நாமக்கல் முனிசிபாலிட்டி சேர்மன் கலாநிதி, கமிஷனர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த நகராட்சி துப்புரவு அலுவலர்கள், ஆய்வாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News