நாமக்கல் அருகே நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் கொரோனா விழிப்புணர்வு வார விழா

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கீரம்பூர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-08-04 09:30 GMT

கீரம்பூர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி நடந்த கொரோனா விழிப்புணர்வு முகாமில், நாமக்கல் சப் கலெக்டர் கோட்டைக்குமார் டிரைவர்களுக்கு கபரசுரகுடிநீர் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவலை தடுக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 1ம் தேதி முதல் கொரோனா விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் கீரம்பூர் நெடுஞ்சாலை டோல் பிளாசா அருகே கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பொது சுகாதாரத்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் சப் கலெக்டர் கோட்டைக்குமார் கலந்துகொண்டு லாரி, பஸ் டிரைவர்கள், பயணிகள், பொதுமக்கள், டோல் பிளாசா பணியாளர்கள் ஆகியோருக்கு மாஸ்க், கையுறை, சானிட்டைசர் வழங்கினார்.

அனைவருக்கும் கபரசு கடிநீர், சித்த மருத்துவ மாத்திரைகள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதில், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், பரமத்தி உதவி மருத்துவர் சிவகாமி, சித்த மருத்துவர் பூபதிராஜா, சுகாதார ஆய்வாளர்கள் முகமதுரபி, செல்வம் மற்றும் வட்டாரப் போக்குரவத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News