நாமக்கல்லில் வரும் 30ம் தேதி மாநில கூடைப்பந்து போட்டி துவக்கம்

நாமக்கல்லில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் வருகிற 30ம் தேதி துவங்குகிறது.

Update: 2023-09-28 07:00 GMT

பைல் படம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், வருகிற 30ம் தேதி, நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள, தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் துவங்குகிறது. போட்டிகள் செப். 30 மற்றும் அக். 1, சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மின்னொளியில் நடைபெறும்.

போட்டி துவக்க விழாவிற்கு, நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்க திலைவர் நடராஜன், சேர்மன் பாண்டியராஜன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். மாவட்ட கூடைப்பந்து சங்க துணைத்தலைவர்கள் சதீஷ்குமார், பரந்தாமன், பன்னீர்செல்வம், கணேஷ் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநிலம் முழுவதும் இருந்து புகழ்பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் போட்டியில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.

போட்டியில் வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் பரிசுகளை வழங்குகின்றனர். நாமக்கல் நகர திமுக செயலாளர்கள் சிவகுமார், பூபதி, ராண ஆனந்த், திமுக மாநில நிர்வாகிகள் வக்கீல் இளங்கோவன், ராணி, ஆனந்தகுமார், மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாதன், நகராட்சித் தலைவர் கலாநிதி உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொள்கின்றனர். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் முரளி, துணை அமைப்பாளர்கள் காந்தி, ஜெயசீலன், சிலம்பரசன், சுரேஷ், பிரபு ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Tags:    

Similar News