ஜார்கண்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் உடல் நாமக்கல் வருகை : அமைச்சர் நேரில் அஞ்சலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொலைசெய்யப்பட்டு உயிரிழந்த,. நாமக்கல் மருத்துவ மாணவரின் இறுதி சடங்கு நாமக்கல்லில் நடைபெற்றது.

Update: 2023-11-04 05:30 GMT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொலைசெய்யப்பட்டு உயிரிழந்த,. நாமக்கல் மருத்துவ மாணவர் மதன்குமாரின் இறுதி சடங்கு நாமக்கல்லில் நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொலைசெய்யப்பட்டு உயிரிழந்த,. நாமக்கல் மருத்துவ மாணவரின் இறுதி சடங்கு நாமக்கல்லில் நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள, பாலக்காடு சாலை கிராமத்தில் வசிப்பவர் மதியழகன் (விவசாயி), இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதியரின் மகன் மதன்குமார் (26) என்பவர் 22.2.1997-ல் பிறந்துள்ளார். மதன்குமார் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200க்கு 1168 மதிப்பெண் பெற்றுள்ளார். 2014-ஆம் ஆண்டில் சென்னை MIT கல்லூரியில் பி.இ.  மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்து,  6 மாதம் படித்தார். பின், இன்ஜினியரிங் படிப்பு நாட்டமின்றி, 2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை சென்னை, தாகூர் மெடிக்கல் கல்லூரியில் 5 ஆண்டு எம்பிபிஎஸ்  மருத்துவ படிப்பினை முடித்துள்ளார்.

2020 முதல் 2022 கோவிட் காலத்தில், திருச்செங்கோடு வேலவன் தனியார் மருத்துவமனையில் 2 ஆண்டுகள் டாக்டராக பணிபுரிந்துள்ளார். 2022-ஆம் ஆண்டு PG நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, மருத்துவ மேல்படிப்பிற்காக ஜார்கண்ட மாநிலத்தில் உள்ள ராஞ்சி RIMS (Rajendra Instutite of medical science) மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். தற்போது, இரண்டாம் ஆண்டு தடயவியல் மருத்துவ நிபுணர் சம்மந்தமான படிப்பு (Forensic scencic) படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2.11.2023 அன்று சுமார் 2 மணியளவில் அவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். 

அவரது உடல் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் கொண்டுவரப்பட்டது. இன்று 4ம்  தேதி காலை, நாமக்கல், சேந்தமங்கலம் ரோடில் உள்ள,  நகராட்சி மின் மயானத்தில், இறந்த மாணவர் மதன்குமாரின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர், இறந்த மாணவர் மதன்குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.

Tags:    

Similar News