நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலின் உண்டியல் காணிக்கை ரூ.48.40 லட்சம்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கை ரூ.48,40,000 கணக்கீடு செய்யப்பட்டது.

Update: 2022-02-25 03:00 GMT

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சயேயர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்கள் மூலம் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

நாமக்கல் நகரில் புராண சிறப்பு பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினசரி இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவற்காக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை 3 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்படும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உண்டியல் திறக்கப்பட்டபோது ரூ.28,92,819 ரொக்கம் காணிக்கையாக பெறப்பட்டது. தற்போது, கோவில் செயல் அலுவலர் (பொ) ஜான்சிராணி, ஈரோடு உதவி ஆணையாளர் அன்னக்கொடி, கண்காணிப்பாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் மூலம் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

கோயில் உண்டியல்களில் மொத்தம் ரூ.48,40,246 ரொக்கப்பணம் மற்றும் 49.5 கிராம் தங்கம், 135 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டது.

Tags:    

Similar News