அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2021-07-05 03:15 GMT

கோப்பு படம்

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,  காலியாக உள்ள 2,000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்ருதுள்ளது.

இது குறித்து நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க, மாநிலத்தலைவர் ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கெரோனா தெற்று பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் நேரடி கற்றல், கற்பித்தல் இல்லாமல் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன. மேலும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்துள்ளவர்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர்.

இதனால் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிதாக சேர்க்கை பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஏற்கெனவே உள்ள காலிப் பணியிடங்கள், கூடுதலாக உருவாக்கப்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்களால் உருவான பணியிடங்கள் என தற்போது வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களை 2019-ஆம் ஆண்டே நிரப்பி இருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் நிரப்பப்படவில்லை. எனவே கெரோனா தொற்று பரவல் குறைந்த பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், போட்டித் தேர்வு நடத்தி முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்வர் நடவடிக்கை வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News