சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்கள் குறித்து மாநில இயக்குனர் ஆய்வு

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

Update: 2022-12-31 06:15 GMT

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் பேசினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. டிஆர்ஓ மணிமேகலை முன்னிலை வகித்தார்.

சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குனர் சுரேஷ்குமார் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள்களுக்கு தேசிய கல்வி உதவி தொகை திட்டம், கல்வி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை, பேகம் ஹஜ்ரத் மகால் தேசிய கல்வி உதவி தொகை திட்டம், பேகம் ஹஜ்ரத் மகால் தேசிய கல்வி உதவித்தொகை திட்டம், மாணவிகளுக்கான கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் நலத்திட்ட உதவிகள், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் மெசின் வழங்கும் திட்டம், பதிவு பெற்ற வக்ஃபு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் பணியாளர்களுக்கு மானிய விலையில் டூ வீலர்கள் வழங்கும் திட்டம், டாம்கோ கடன் திட்டம் என பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தகுதியானவர்கள் இவற்றைப் பயன்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியின் தங்களை உயர்த்திக்கொள்ள முன்வர வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு வரை மேற்கொண்ட திட்டங்கள், வரப்பெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பயனடைந்தோர்களின் எண்ணிக்கை ஆகியவ விபரங்களை அவர் கேட்டறிந்தார். மேலும் பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டம் தொடர்பாக கல்லூரி கல்வி இணை இயக்குநர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு நிலுவை விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் தினந்தோறும் தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட சிவஞானம் தெரு, சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் பயனடைந்த பயனாளிகளின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று அவர்களின் தொழில் நிறுவனங்களை, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குனர் சுரேஷ்குமார் பார்வையிட்டார். அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளர் (பொது) சேகர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News