தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், நடந்த பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2022-06-07 02:30 GMT

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற, பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு, கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. அதில், உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சினேகா, வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் இளவரசன், உடையாளர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சினேகா ஆகியோர், முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு, ரூ. 5,000, 3,000, 2,000 வீதம் பரிசு வழங்கப்பட்டது.

மேலும், சிறப்பு பரிசாக, மாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் மவுலீஸ்வரன், கூனவேலம்பட்டிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கோபிகா ஆகியோருக்கு, ரூ. 2,000 பரிசு வழங்கப்பட்டடது. கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில், கே.எஸ்.ஆர் கல்லூரி மாணவர் ஹரிநிவாஸ், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி மாணவி கலையரசி, நாமக்கல் அண்ணா அரசு கல்லூரி மாணவி அமுதவள்ளி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பேச்சு போட்டியில், குமாரபாளையம் அரசு கல்லூரி மாணவர் மோகன்ராஜ், ஜே.ஜே.கே நடராஜா கலைக் கல்லூரி மாணவர் புகழேந்தி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி மாணவி பத்மா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு, அதற்கான பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை, கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார். டிஆர்ஓ (பொ) மல்லிகா, சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் தேவிகாராணி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜோதி உள்ள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News