நாமக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

நாமக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

Update: 2022-09-25 02:30 GMT

நாமக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்திய அஞ்சல் துறை சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக, நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தலைமை தபால் அலுவலகங்களில், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நாமக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் நடந்த முகாமை, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். துணை கண்காணிப்பாளர் அண்ணாமலை, போஸ் மாஸ்டர் தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் கோட்டத்தில் பணியாற்றும் அலுவலர்கள், அஞ்சலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள், வாடிக்கையாளர்களுக்கு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது.

எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாலசாரதி தலைமையில், பயிற்சி மருத்துவர் நவீன்குமார் மற்றும் குழுவினர், பரிசோதனை செய்தனர். அதேபோல், திருச்செங்கோடு தலைமை அஞ்சல் அலுவலகத்திலும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமில், அஞ்சலக பணியாளர்கள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை வணிக வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News