நாமக்கல்: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்க கோரி பெண்கள் முற்றுகை

100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கக்கோரி புதுச்சத்திரம் பிடிஓ ஆபீசை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்.

Update: 2022-03-11 05:45 GMT

100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் பணி வழங்கக்கோரி, புதுச்சத்திரம் பிடிஓ ஆபீசை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமப்புற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கக்கோரி புதுச்சத்திரம் பிடிஓ ஆபீசை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் உள்ளது செல்லப்பம்பட்டி கிராம பஞ்சாயத்து. இதில் நடுப்பட்டி, மேற்குப்பட்டி, பாலப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட பெண்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக, செல்லம்பட்டி பஞ்சாயத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பிடிஓ சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் 100 நாள் திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு வழங்க அவர் உறுதியளித்தார். இதைத்தெடார்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

Tags:    

Similar News