தொழிலாளர் துறை மூலம் வணிக நிறுவன உரிமையாளர்களுக்கான கருத்தரங்கம்
நாமக்கல்லில் தொழிலாளர் துறை சார்பில், கடைகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.;
நாமக்கல்லில் தொழிலாளர் துறை சார்பில் நடைபெற்ற, வணிக நிறுவனங்களுக்கான கருத்தரங்கில், மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் பேசினார்.
நாமக்கல்,
நாமக்கல்லில் தொழிலாளர் துறை சார்பில், கடைகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொழிலாளர் கல்கி நிலையம், தொழிலாளர் துறையுடன் இணைந்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் தொடர்பான தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்து, ஒரு நாள் கருத்தரங்கு, நாமக்கல்லில் நடைபெற்றது. தொழிலாளர் துறை கூடுதல் கமிஷனர் சசிகலா தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் குத்து விளக்கு ஏற்றி கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசினார். ஈரோடு தொழிலாளர் இணை கமிஷனர் மாதவன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை கமிஷனர் கவிதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.
கருத்தரங்கில் தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் வர்த்தகர்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் தண்டனை மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.