கட்டாயக்கல்வி சட்டத்தில் தனியார் பள்ளியில் சேர்க்கை: ஜூலை 5 முதல் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற விரும்புவோர், வரும் 5ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று நாமக்கல் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2021-07-01 11:16 GMT

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி,  தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீதம் ஒதுக்கீட்டில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 168 தனியார் சுயநிதி பள்ளிகளில் (மெட்ரிக், நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகள்) நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டின் கீழ் (மெட்ரிக் பள்ளிகள் - 1803, நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகள் - 724) மாணவர் சேர்க்கைக்கு இண்டர்நெட் மூலம் விண்ணப்பிக்கலாம்.

எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்புகளுக்கு, அருகாமையிடம் என்பது 1 கி.மீக்குள் இருக்க வேண்டும். பெற்றோர்கள் இண்டர்நெட்மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் முதன்மைக்கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, இண்டர்நெட் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 5ம் தேதி முதல் ஆக.3ம் தேதி வரை இண்டர்நெட் மூலம் விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்ட்டு சேர்க்கை வழங்கப்படும். இண்டர்நெட் மூலம் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரரின் குழந்தையின் புகைப்படம், பிறப்புச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ்உள்ளோர்), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கான சான்று ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News