நாமக்கல்லில் 18 வயதுக்குட்பட்ட 52 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு பரிந்துரை முகாமில் 52 பேர் உதவித்தொகை பெற பரிந்துரை செய்யப்பட்டனர்.

Update: 2022-06-18 01:00 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற 18 வயதுக்கும் குறைவான மாற்றுத்திறனாகளுக்கான, பரிசோதணை முகாமை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு பரிந்துரை முகாமில் 52 பேர் உதவித்தொகை பெற பரிந்துரை செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கும் குறைவான, பல்வேறு உடற்குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கும் வகையில், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில், அரசு டாக்டர்கள், சமூகநல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர், சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் ஆகியோர் கொண்ட குழுவினர், கலெக்டர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு வயது தளர்வு குறித்த பாரிசோதனை நடத்தினார்கள்.

இதில் தாலுக்கா வாரியாக, குமாரபாளையத்தில் 8 பேர், ராசிபுரத்தில் 19 பேர், மோகனூரில் ஒருவர், சேந்தமங்கலத்தில் 10 பேர், திருச்செங்கோட்டில் 6 பேர், நாமக்கல்லில் 6 பேர், பரமத்திவேலூரில் 6 பேர், கொல்லிமலையில் 2 பேர் என மொத்தம் உள்ள 58 பேரில், 52 பேர் முகாமில் கலந்துகொண்டனர். மருத்துவப் பரிசோதணைக்குப் பின்னர் பல்வேறு குறைபாடுகள் கொண்ட 46 பேருக்கு வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கவும், மேலும் 75 சதவீதத்திற்கு மேல் உடற்குறைபாடு உடைய 6 பேருக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.1500 வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த முகாமில் சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் தேவிகாராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுருக தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News