மோகனூர் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் துவக்கம்

மோகனூர் பேரூராட்சியில் ரூ. 35.70 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

Update: 2023-06-13 04:30 GMT

மோகனூர் பேரூராட்சியில் ரூ. 35.70 லட்சம் மதிப்பீட்டில், சாலை அமைப்பு பணிகளை ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

நாமக்கல், மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு மற்றும் 6வது வார்டு பகுதிகளில், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35.70 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது.

இந்தப் பணிகள் துவக்க விழாவிற்கு, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி வரவேற்றார். பேரூராட்சி தலைவர் வனிதா, அட்மா கமிட்டி தலைவர் நவலடி, மோகனூர் நகர திமுக செயலாளர் செல்லப்பன், மோகனூர் பேரூராட்சி துணைத்தலைவர் சரவணகுமார், முன்னாள் மாவட்ட திமுக அவைத் தலைவர் உடையவர், மோகனூர் இளைஞர் அணி அமைப்பாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான  ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாலை அமைப்பு பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக பிரமுகர்கள் சுகுமார், வரதராஜன், குமரவேல், உதயபானு, கோவிந்தன், பாப்பாத்தி, ரவிசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News