அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சங்க கூட்டத்தில் தீர்மானம்

நாமக்கல் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில், மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநாடு நடைபெற்றது.

Update: 2022-03-27 13:00 GMT

நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநாட்டில், மாநில பொதுச் செயலாளர் டெய்சி பேசினார்.

நாமக்கல் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில், மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கண்ணகி தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாண்டிமாதேவி வரவேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். சங்க மாநில பொதுச் செயலாளர் டெய்சி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

மாநாட்டில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களை அரசு ஊழியராக்கி முறையான கால முறை சம்பளம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர் .ஜெயக்கொடி, பொருளாளர் பிரேமா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News