ஆய்விற்கு சென்ற எம்.பியிடம் பஞ்சாயத்து ஆவணங்களைக் காட்ட மறுப்பு: கலெக்டரிடம் எம்.பி புகார்

லத்துவாடி பஞ்சாயத்திற்கு ஆய்வுக்குச் சென்ற எம்.பி சின்ராஜிடம் ஆவணங்களைக் காட்ட மறுத்ததால், பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Update: 2022-07-09 02:00 GMT

சின்ராஜ், எம்.பி.,

லத்துவாடி பஞ்சாயத்திற்கு ஆய்வுக்குச் சென்ற எம்.பி சின்ராஜிடம் ஆவணங்களைக் காட்ட மறுத்ததால், பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் எம்.பி வலியுறுத்தினார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், லத்துவாடி ஊராட்சி நிர்வாகத்தில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. குறிப்பாக, வீட்டுமனை அனுமதி வழங்குவதில் முறைகேடு, அனுமதி இல்லாத குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியது, பஞ்சாயத்து நிர்வாகத்தில், தலைவர் பரமேஸ்வரியின் கணவர் ரஜினி தலையீடு என, பல்வேறு புகார்கள் நாமக்கல் லோக்சபா எம்.பி சின்ராஜிடம் வந்துள்ளன. அதையடுத்து, எம்.பி. சின்ராஜ் புகார்கள் குறித்து, ஆய்வு செய்வதற்காக லத்துவாடி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு நேற்று சென்றார். அப்போது, பஞ்சாயத்து தலைவர் பரமேஸ்வரி அங்கு இல்லை. அவரது அறை பூட்டப்பட்டிருந்தது.

இது குறித்து, பஞ்சாயத்து செயலாளர் செல்வராஜிடம், எம்.பி சின்ராஜ் விளக்கம் கேட்டார், அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, பஞ்சாயத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிடுவதற்காக கேட்டுள்ளார். அதற்கு, பஞ்சாயத்து தலைவர் பரமேஸ்வரி, தனது அறையில் ஆவணங்களை வைத்துப் பூட்டிவிட்டு வெளியில் சென்று சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

அதனால், அதிர்ச்சி அடைந்த எம்.பி. சின்ராஜ், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பஞ்சாயத்து தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

Similar News