நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச தின விழா

நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச தின விழா நடைபெற்றது.

Update: 2022-04-09 09:45 GMT

நாமக்கல் மாவட்ட கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற, சமரச தின விழா விழிப்புணர்வு ஊர்வலத்தை, மாவட்ட சிறப்பு நீதிபதி (பொ) சசிரேகா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை ஐகோர்ட்டில் உள்ள, தமிழ்நாடு சமரச தீர்வு மைய வழிகாட்டுதல்படி, நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச தின விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி, மாவட்ட கூடுதல் நீதிபதி, மாவட்ட சிறப்பு நீதிபதி, கூடுதல் சார்பு நீதிபதி, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி, நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கோர்ட்டு நீதிபதிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மாவட்ட முதன்மை நீதிபதி (பொ) சசிரேகா ரிப்பன் வெட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட சிறப்பு நீதிபதி நந்தினி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஊர்வலத்தில் நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில், பொதுமக்களுக்கு சமரச மையம் பற்றிய விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News