மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணம் வழங்கல்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாற்று திறனுடைய குழந்தைகளுக்கு, உதவி உபகரணங்கள் வழங்களை எம்.பி ராஜேஷ்குமார் வழங்கினார்.

Update: 2021-11-16 11:00 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை எம்.பி ராஜேஷ்குமார் வழங்கினார். அருகில் கலெக்டர் துர்காமூர்த்தி, சிஇஓ மகேஸ்வரி ஆகியோர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். டிஆர்ஓ துர்காமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் எம்.பி. ராஜேஷ்குமார் கலந்துகொண்டு மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 4 பேருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி என ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் 12 குழந்தைகளுக்கு நடைபயிற்சி உபகரணம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான மருத்துவ உபகரணங்கள், மூன்று சக்கர வண்டி, காது கேட்கும் கருவி, சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ராமன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News