நாமக்கல் வேலை வாய்ப்பு மையத்தில் பயின்ற 24 பேருக்கு போலீஸ் பணி: கலெக்டர் பாராட்டு

நாமக்கல் வேலை வாய்ப்பு மைய இலவச பயிற்சி வகுப்பில் படித்து போலீஸ் பணிக்கு தேர்வான 24 பேருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-11 02:45 GMT

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக இலவச பயிற்சி வகுப்பில் படித்து போலீஸ் பணிக்கு தேர்வு பெற்ற 24 பேருக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் கேடயம் வழங்கி பாராட்டினார்.

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, போலீஸ் பணிக்கு தேர்வு பெற்ற 24 பேருக்கு கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட போலீஸ் பணியிடத்திற்கான தேர்வில், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் எழுத்துத் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

மேலும் உடற்தகுதி தேர்விற்கான இலவச பயிற்சி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் கலந்துகொண்ட 24 மாணவ, மாணவிகள் இரண்டாம் நிலை போலீசார் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர வாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News