பெட்ரோல், டீசல் விலை உயர்வு; நாமக்கல்லில் இன்றைய விலை நிலவரம்

நாமக்கல்லில் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

Update: 2021-11-01 00:15 GMT

கோப்பு படம்

கடந்த 2 ஆண்டுகளாக தினசரி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் கம்பெனிகள் தினசரி உயர்த்தி வருகின்றன. கொரோன ஊரடங்கு காலத்திலும், முக்கிய அரசு விடுமுறை நாட்களிலும் கூட எண்ணை கம்பெனிகள் தவறாமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர்.

இதனால் லாரி, பஸ், டாக்சி உரிமையாளர்களும், விவசாயிகளும், சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த செப். 30ம் தேதி ஒரு லிட்டர் டீசல் ரூ.95.09க்கு விற்பனையானது. நாள்தோறும் படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு, கடந்த ஒரு மாதத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.8.16 உயர்ந்து, இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.103.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் பகுதியில் இன்றைய விலை விபரம்: டீசல் விலை, ஒரு லிட்டருக்கு 36 பைசா அதிகரித்து, விலை ரூ.103.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 33 பைசா அதிகரித்து, விலை ரூ.106.99 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 33 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் விலை ரூ. 110.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News