மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் இடமாற்றம்: எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்.

Update: 2021-09-13 10:30 GMT

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து மாவட்ட தலைவர் தெரிவித்ததாவது:

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக இருந்த அலுவலகத்தை கடந்த ஆண்டு லாக்டவுனில் மாற்றுத்திறனாளிகள் கஷ்டங்களை உணராமல் அலுவலகத்தை தொலைதூரம் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் பாத்ரூம் செல்ல, டீ அருந்த, ஜெராக்ஸ் எடுக்க இப்படி எல்லா வகையிலும் சிரமப்படுகிறோம். எனவே மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை மாற்றவேண்டும் என தெரிவித்தார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டு மாற்றுத்திறனாளிகள் தங்களது காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News