கோழிப்பண்ணைகளில் வட மாநில தொழிலாளர்கள்: போலீஸ் துறை எச்சரிக்கை

Chicken Poultry Farm -கோழிப்பண்ணைகளில் வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும்போது, கவனமாக விசாரிக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Update: 2023-01-21 02:00 GMT

பைல் படம்

Chicken Poultry Farm -கோழிப்பண்ணைகளில் வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும்போது, கவனமாக விசாரிக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மற்றும் அதன் சார்ந்த தீவன ஆலைகளில் உள்ளூர் தொழிலாளர் மட்டும் இன்றி பல ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோழிப் பண்ணைகளுக்கு தேவையான வடமாநில பணியாளர்களைக் கொண்டுவந்த சேர்க்க அதற்கான ஏஜெண்டுகள் உள்ளனர். ஏஜெண்டுகளை நம்பியே அவர்கள் பணிக்கு வருகின்றனர்.

பணியாளர்கள் பண்ணை வளாகத்தில் உள்ள தங்குமிடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். மாத சம்பளம் ஏஜெண்டுகள் கணக்கில் வழங்கப்படுகிறது. அவர்களே பணியாளர்களுக்கான சம்பளத் தொகையை வழங்குகின்றனர். வட மாநில பணியாளர்கள் பற்றிய முழு விபரங்கள், அவர்களில் யாரும் குற்றவாளிகளாக என்பது குறித்த விபரங்கள் பண்ணையாளர்களுக்கு தெரிய வாய்ப்புகள் மிகவும் குறைவு.

நாமக்கல், மேகனூர் ரோட்டில் உள்ள ஒரு கோழித்தீவன அரவை ஆலையில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அந்த ஆலை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீவன ஆலை வளாகத்தின் ஒரு பகுதியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில், நாமக்கல் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 3 கிலோ எடையுள்ள ஒரு கஞ்சா செடி வளர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோழிப் பண்ணைகள் மற்றம் தீவன அரவை ஆலைகளில், பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த விபரங்கள் தெரிந்து கொண்டு வேலைக்கு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க வளாகத்தி,ல் நாமக்கல் நகர போலீஸ் துறை சார்பில் பண்ணையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் ஆகியோர் கூட்டத்திற்கு வந்திருந்த பண்ணையாளர்களிடம் பேசியதாவது:

கோழிப் பண்ணைகளில் வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முன்பு அவர்களது விபரங்களை கேட்டறிய வேண்டும். அவர்களது ஆதார் அட்டை உள்ளிட்ட பிற ஆவணங்களை சரி பார்க்க வேண்டும். அதன் பின்னரே அவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். அவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பண்ணைகளில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பண்ணையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News