நாமக்கல்லில் ரூ.5.70 கோடியில் புதிய மார்க்கெட் வளாகத்திற்கு ஒப்புதல்

நாமக்கல்லில் ரூ.5.70 கோடியில் புதிய மார்க்கெட் வளாகம் அமைக்க, நகர்மன்ற கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2022-04-30 01:00 GMT

நாமக்கல் முனிசிபாலிட்டி நகர்மன்றக் கூட்டம் தலைவர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பூபதி, கமிஷனர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், நாமக்கல் நகராட்சியில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 5 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தை வளாகத்தை மேம்படுத்தி, புதிய மார்க்கெட் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முனிசிபாலிட்டி பகுதியில் உள்ள, 39 வார்டுகளில், குடிநீர், ரோடு வசதி, சாக்கடை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள, தலா ரூ.5 லட்சம் வீதம், ரூ. 1.95 கோடி ஒதுக்கீடு செய்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News