நாமக்கல்லில் வரும் 13ம் தேதி இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

நாமக்கல்லில் வருகிற 13ம் தேதி இயற்கை வேளாண்மை குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-05-10 02:00 GMT

பைல் படம்.

நாமக்கல்லில் வருகிற 13ம் தேதி இயற்கை வேளாண்மை குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வருகிற 13ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இயற்கை வேளாண்மை (ஆர்கானிக் ஃபார்மிங்) என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் இயற்கை வேளாண்மை முறைகள், அங்கக வேளாண் இடுப்பொருட்களின் பயன்பாடு, மண்வள மேம்பாடு, ஜீவாமிர்த கரைசல் தயாரித்தல் பற்றி செயல்விளக்கம் மற்றும் அங்கக வேளாண் முறையில் பூச்சி நோய்கள் கட்டுப்பாட்டு முறைகள் பற்றிய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு அங்கக சான்றிதழ் வாங்கும் முறைகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இயற்கை வேளாண்மையில் ஈடுபாடு உள்ள விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். விருப்பமுள்ளவர்கள் 04286-266345, 266650 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News